மியூசியமாக மாறும் தாய்லாந்து குகை: பிரதமர் அதிரடி அறிவிப்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
81Shares
81Shares
lankasrimarket.com

உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாய்லாந்து குகை விரைவில் மியூசியமாக மாற்றப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

தாய்லாந்தில் சியாங் ராய் பகுதியில் உள்ள தி தம் லுஅங் கோகி பகுதியில், கடந்த 23-ம் தேதி 11 முதல் 16 வயதுடைய கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர், 25 வயதுடைய தங்களது பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்பொழுது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக 13 பேரும் குகையிலேயே சிக்கி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் பல நாடுகளை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் கடந்த 17 நாட்களுக்கு பிறகு தாய்லாந்து கடற்படை மீட்டெடுத்தது. தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பான காணொளி காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 12 மாணவர்கள் மீட்கப்பட்ட குகை இனி விரைவில் மியூசியமாக மாற்றப்படும். பயணிகள் அனைவருக்கும் எப்படி மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கண்காணிக்கும் விதமாக இனி பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்டுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறுவர்களை குகையிலிருந்து மீட்கும்பணி நடைபெறும்பொழுதே ஹாலிவுட் படக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததும், இதுதொடர்பான படத்தை அமெரிக்காவை சேர்ந்த பியூர் பிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக, தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்