உலக அளவில் பொருளாதாரத்தில் உச்சம் பெற்ற நாடுகளின் பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
194Shares
194Shares
lankasrimarket.com

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

உலக வங்கியின் புள்ளிவிவரப் படி கடந்த 2017 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கில்கொண்டு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவற்றைக் கொண்டே பொருளாதார வல்லுநர்கள் பொதுவாக குறிப்பிடுகின்றனர்.

இதில் 19.36 ட்ரில்லியன் டொலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 12.23 ட்ரில்லியன் டொலர்களுடன் சீனா உள்ளது.

3-வது இடத்தில் ஜப்பான் உள்ளது. 4-வது மற்றும் 5-வது இடத்தில் முறையே ஜேர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளது.

குறித்த பட்டியலில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் இருப்பினும் ஆசியாவில் இருந்து இந்தியாவும் சீனாவும் 2-வது மற்றும் 6-வது இடங்களில் உள்ளது. 10-வது இடத்தில் கனடா உள்ளது.

பொருளாதாரத்தில் உச்சம் பெற்றுள்ள 10 நாடுகள்:

  • அமெரிக்கா - 19.36 ட்ரில்லியன் டொலர்
  • சீனா - 12.23 ட்ரில்லியன் டொலர்
  • ஜப்பான் - 4.87 ட்ரில்லியன் டொலர்
  • ஜேர்மனி - 3.67 ட்ரில்லியன் டொலர்
  • பிரித்தானியா - 2.62 ட்ரில்லியன் டொலர்
  • இந்தியா - 2.59 ட்ரில்லியன் டொலர்
  • பிரான்ஸ் - 2.58 ட்ரில்லியன் டொலர்
  • பிரேசில் - 2.05 ட்ரில்லியன் டொலர்
  • இத்தாலி - 1.93 ட்ரில்லியன் டொலர்
  • கனடா - 1.65 ட்ரில்லியன் டொலர்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்