விசா இல்லாமல் வெளிநாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட் வழங்கும் நாடுகள் இதோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இன்டர்நேஷனல் ஏர் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசன் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் விசா இல்லாமல் அதிகமான நாடுகளுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்கும் நாடுகள் என்ற வகையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் சுமார் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் வகையிலான பாஸ்போர்ட்டுகளை வழங்குகின்றன.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனி தற்போது 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அண்மையில், உலகப்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்கு பல நாடுகளில் பல விசாக்களை ரஷ்யா நிராகரித்தது. அதுபோல் புதிய இடங்களுக்கு ரஷ்ய நாட்டினர் செல்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விசாக்களும் நிராகரிக்கப்பட்டன.

ரஷ்யா தர வரிசை பட்டியலில் 46வது இடத்தை பெற்றுள்ளது.

பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள நாடுகள்

ஜப்பான், சிங்கப்பூர்

ஜேர்மனி

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ஸ்பெயின், தென்கொரியா.

நோர்வே, லண்டன், ஆஸ்திரியா, லக்ஸ்ம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா.

பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா

அவுஸ்திரேலியா, கிரீஸ்

நியூசிலாந்து, செக் குடியரசு, மால்டா

ஐஸ்லாந்து

ஹங்கேரி, ஸ்லோவெனியா, மலேசியா

ஸ்லோவேகியா, லாட்வியா, லித்துவேனியா

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்