அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியல்: முதலிடத்தில் யார் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்ப்ஸ் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

பொதுவாக 100 பேர் இடம்பெறும் இந்தப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய நடிகர்கள் உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.

ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 40.1 மில்லியன் டொலர்களை சம்பாதித்ததன் மூலம், இந்தப் பட்டியலில் 76வது இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு திரைப்படங்கள் மட்டுமின்றி, சுமார் 20 விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் 37.7 மில்லியன் டொலர்களை ஈட்டியதன் மூலம் 82வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 65வது இடத்தில் இருந்த ஷாருக் கான், இவ்வருடம் 100 இடங்களுக்குள் வரவில்லை.

முதல் 10 இடங்களை பிடித்த பிரபலங்கள்
  1. குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் (அமெரிக்கா) - 285 மில்லியன் டொலர்கள்
  2. ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி (அமெரிக்கா) - 239 மில்லியன் டொலர்கள்
  3. தொலைக்காட்சி நடிகர் கெய்லி ஜென்னர் (அமெரிக்கா) - 166.5 மில்லியன் டொலர்கள்
  4. தொலைக்காட்சி நடிகை ஜூடி ஷெய்ண்ட்லின் (அமெரிக்கா) - 147 மில்லியன் டொலர்கள்
  5. ஹாலிவுட் நடிகர் டிவெய்ன் ஜான்சன் (அமெரிக்கா) - 124 மில்லியன் டொலர்கள்
  6. பாப் இசைக்கலைஞர் U2 (அயர்லாந்து) - 118 மில்லியன் டொலர்கள்
  7. பாப் இசைக்கலைஞர் கோல்டுபிளே (பிரித்தானியா) - 115 மில்லியன் டொலர்கள்
  8. கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி (அர்ஜெண்டினா) - 111 மில்லியன் டொலர்கள்
  9. பாப் இசைக்கலைஞர் எட் ஷீரன் (பிரித்தானியா) - 110 மில்லியன் டொலர்கள்
  10. கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துகல்) - 108 மில்லியன் டொலர்கள்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்