பெண்களை கொடூரமாக கொலை செய்த தந்தை- மகன்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரோமேனியா நாட்டில் கொடூரமான கொலைகாரர்களான இருந்த தந்தை-மகன் குறித்த அதிர வைக்கும் சம்பவங்கள் குறித்து இங்கு காண்போம்.

ரோமேனியா நாட்டில் Florea Rimaru மற்றும் Ion Rimaru ஆகிய தந்தை-மகன் இருவரும் Serial Killers எனும் தொடர் கொலைகாரர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 1944ஆம் ஆண்டு ஃப்ளோரியா ரிமரு என்பவர் தொடர்ச்சியாக நான்கு கொலைகளை செய்தார். இவர் பெரும் சீரியல் கில்லராக அறியப்பட்டார். ஆனால், இவரது மகன் இயான் ரிமரு இவரை விட பெரிய சீரியல் கில்லராக ஆவார் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

கடந்த 1970-71களில் மிகவும் கொடூரமாக கொலை செய்பவன் என தேடப்பட்டு வந்தான் இயான் ரிமரு. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலர் இவனால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இரும்பு கம்பி அல்லது கோடாரியால் அவர்கள் தாக்கப்பட்டிருந்தனர். இயான் ரிமரு, குறித்த பெண்களை தாக்கி, பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் அவர்களது உடலில் இருந்து சில பாகங்களை எடுத்துள்ளான்.

அவன் ரத்தம் குடிக்க விரும்புபவன் என்பது பின்பு தான் தெரிய வந்தது. இவன் கொலை செய்த பின்னர் தன்னுடைய காலனி, கை ரேகை போன்ற அடையாளங்களை விட்டுச் சென்று விடுவான். ஆனாலும் இவனை கண்டுபிடிப்பது பொலிசாருக்கு ஒரு சவாலாகவே இருந்தது.

சிறு வயதில் தனது தந்தையின் கொடூர குணங்களைப் பார்த்து வளர்ந்த இயான், ஆரம்பத்தில் தன் மீதே அதிகம் கோபம் கொண்டவனாக இருந்துள்ளான். அதற்காக அவன் தன்னை தானே தாக்கி காயப்படுத்திக் கொள்பவனாகவும் இருந்திருக்கிறான்.

9ஆம் வகுப்பு படிக்கும் போது குழந்தையுடன் பாலியல் உறவு கொண்ட இயான், தனது 18வது வயதில் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றான். எனினும், படிப்பில் கவனம் செலுத்திய அவன் மருத்துவத்தில் Veterinary Medicine-யை படித்திருக்கிறான்.

வீட்டின் தரைத்தளத்தில் வசித்தவர்களை தேடி தேடி இவன் கொலை செய்திருக்கிறான். புயல் காலங்களில் தான் இவனது கொலைகள் நடந்திருக்கின்றன. இயான் செய்த கொலைகளில், கொல்லப்பட்டவர்கள் தலையில் அடித்து சிதைக்கப்பட்டிருந்தனர்.

கொலை நடந்தது வெவ்வேறு இடங்கள் என்பதால் ஆரம்பத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பார்க்க முடியாமல் இருந்தது. முதலில் இந்த கொலைகள் முன்விரோதம் அல்லது பணத்திற்காக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து கொலைகள் நடக்கும் போது கிடைத்த ஒற்றுமையை வைத்து கொலை செய்தது ஒரே ஆள் தான் என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு கொலைகாரன் யார் என்றே தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஓர் ஆண்டுகாலம் கடந்த பின்னர் இயானின் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கொடுத்த சிறு சிறு தகவல்களைக் கொண்டு பொலிசார் இயானை தேடினர்.

இதற்காக சுமார் 2500 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் கிடைத்த தகவல்களை பொலிசார் திரட்டினர். பின் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவர் குறித்த தகவல்களை பெற பொலிசார் மருத்துவரை நாடியுள்ளனர்.

அப்போது இயானும் அதே மருத்துவரிடம் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பெற்றிருக்கிறான். கொலையுண்ட பெண்ணின் கைகளில் ஆணின் முடி இருப்பதை கண்டு DNA பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

அதன் முடிவில் கொலைகாரன் தான் கொலை செய்யும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருப்பார் என்றும், அவனுக்கு என்னென்ன கோளாறுகள் இருந்திருக்கும் என்றும் தெரிய வந்தது. கொலைகாரன் நரம்பு கோளாறு பாதிப்பில் இருப்பான் என்றும் தெரிய வந்தது.

அப்போது அங்கு நின்றிருந்த இயானை கவனித்த பொலிசார் அவனது நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். அதனையறிந்த இயான், தப்பியோட முயன்றபோது பொலிசார் சுற்றி வளைத்து அவனை கைது செய்தனர். 1971ஆம் ஆண்டில் இது நிகழ்ந்தது.

இயானிடம் கைப்பற்றப்பட்ட பையில் கூர்மையான ஆயுதங்கள் ரத்தக் கறையுடன் இருந்தது. மேலும், கோடரி ஒன்று நீளமான முடியுடன் இருந்தது. பின்னர் இயான் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான். அப்போது அவனுக்கு நரம்பு கோளாறு இருப்பதும், அடிக்கடி வலிப்பு வரக்கூடும் என்றும் தெரிய வந்தது.

மேலும், அவனிடம் நடத்திய விசாரணையில் தான் 20 பேரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். இயானை சிறையில் அடைத்த பின்னர் ஒரு வாரம் பேசாமல் மவுனமாக இருந்திருக்கிறான்.

அதன் பின்னர் அவன் கூறுகையில், ‘நான் செய்யும் இந்த செயலால் அந்த பெண் பாதிக்கப்படுவாள், அவள் உயிர் பிரிகிறது என்றே எனக்கு தெரியாது’ என்று தெரிவித்தான்.

இயானால் தாக்கப்பட்டு உடலில் கீறல், கட்டுடன் படுக்கையில் இருந்தவர்களை பார்த்து இயான் பயந்து அலறியிருக்கிறான். பின் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி இயான் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவம் நிகழ்ந்து சரியாக ஒரு வருடம் கழித்து அவனது தந்தை ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்