உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலககோப்பை போட்டியில் கால்பந்தாட்ட ரசிகர்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்த குரேஷியா அணி தங்கள் நாட்டிற்கு ஒரு பெருமை தேடி தந்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் குரேஷியா அணி தோல்வியடைந்த போதும், அந்தணியின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் குரேசியா என்ற வார்த்தை இணையதளங்களில் அதிகம் பேர் தேடியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் ரஷ்யா அணியை குரேஷியா வீழ்த்திய பின்பு, அந்தணியை பலரும் இணையதளங்களில் தேடியுள்ளனர், குரேஷியா என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

இப்படி காலிறுதி போட்டிக்கு பின்னர் குரோஷியா என்ற வார்த்தை இணையதளங்களில் 30 சதவீதம் பேர் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது சிறிய நாடு, இந்த நாட்டைப் பற்றி பலரும் தெரிந்திருக்காத நிலையில், உலகக்கோப்பை தொடரில் அந்நாட்டின் ஜனாதிபதி ஒவ்வொரு போட்டிக்கும் வந்து தங்களுடைய வீரர்களை உற்சாகப்படுத்தியது, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போதும் தங்கள் வீரர்களை பாரட்டியது போன்றதே முக்கிய காரணம் எனவும் இதன் மூலம் தங்கள் நாட்டைப் பற்றி பலரு தெரிந்திருப்பர், இது எங்களுக்கு கிடைத்த பெருமை என்று அந்நாட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers