உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாடிய பிரபல வீரரின் அம்மாவுக்கு நேர்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய டைசன் ப்ரிடாவின் தாய் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைசனின் தாயான ரோசன்கிலா வீட்டுக்கு சில மர்ம நபர்கள் வந்துள்ளனர், அப்போது ஒருவர் ரோசன்கிலாவிடம் பூ கொடுப்பது போல திடீரென அவரை கடத்த முயன்றார்.

இதை பார்த்து அவர் பயந்த நிலையில் உடன் துப்பாக்கியுடன் இருந்த சிலர் ரோசன்கிலாவை கடத்தி சென்றனர்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவானது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து பார்த்து சிசிடிவி காட்சியை ஆராய்ந்ததோடு, அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

இதையடுத்து ரோசன்கிலா அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுப்பிடித்து அங்கு சென்றார், அங்கு ரோசன்கிலா சேரில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அங்கிருந்த பெண் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்த நிலையில் தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள்.

கைதானவர்கள் மீது கொலை மற்றும் போதை வழக்குகள் ஏற்கனவே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரோசன்கிலாவை கடத்தி அவர் குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்க குற்றவாளிகள் முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers