தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வீடு திரும்பினர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

புதிய இணைப்பு:

தற்போது தாய்லாந்து குகையிலிருந்த மீட்கப்பட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகி வருகின்றன.
தங்களுக்கு குகையில் ஏற்பட்ட அனுபவம் முதல் தங்களுக்கு பிடித்த உணவு வரை பல்வேறு விடயங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
உங்கள் பெற்றோரிடம் என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு எல்லோருமே, நாங்கள் எங்கள் பெற்றோரிடம் சாரி சொல்ல விரும்புகிறோம் என்றார்கள்.

ஒரு சிறுவன் தன் தந்தை தன்னை தண்டிப்பாரோ என பயப்படுவதாகத் தெரிவித்தான்


முதல் இணைப்பு: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பின தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எட்டு நாட்கள் ஆன நிலையில் இன்று அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

வெள்ளி மற்றும் இளஞ்சிவப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த வேன்களில் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்கள் இன்று தங்கள் அனுபவங்கள் குறித்து ஊடகங்கள் முன்பு பேட்டியளிக்க உள்ளனர்.

என்றாலும் கேட்கப்படும் கேள்விகளை மன நல மருத்துவர்கள் கவனித்து ஏற்கனவே அதிக மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை பாதிக்கும் கேள்விகள் இல்லை என்றால் மட்டுமே அக்கேள்விகளை அனுமதிப்பார்கள்.

தாய்லாந்து அரசு 45 நிமிட பேட்டி ஒன்றிற்கு அனுமதியளித்துள்ளது.

இந்த பேட்டி இன்று மாலை ஆறு மணியளவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

பத்திரிகையாளர்கள் முன் கூட்டியே அளித்த பல கேள்விகளுக்கு சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் பதிலளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்