உலகின் தலைச்சிறந்த விமான சேவை நிறுவனம் எது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகின் தலைச்சிறந்த விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் இந்த ஆண்டு சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் பெருவாரியான மக்களால் விரும்பப்படும் விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த கட்டார் விமான சேவை நிறுவனம் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளது.

முதலிடத்தில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதன் முறையாக குறித்த பட்டியலில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் முதலிடத்திற்கு வந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக கட்டார் விமான சேவை நிறுவனமே முதலிடத்தில் இருந்து வந்துள்ளது.

தற்போது இரண்டாவது இடத்தில் கட்டார் விமான சேவை நிறுவனமும் இன்னொரு வளைகுடா நாடுகளில் இருந்து செயல்படும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் 4-வது இடத்திலும் உள்ளது.

நிப்பான் விமான சேவை நிறுவனமானது இந்த ஆண்டும் 3-வது இடத்தில் உள்ளது.

உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்கள்
  • Singapore Airlines
  • Qatar Airways
  • ANA All Nippon Airways
  • Emirates
  • EVA Air
  • Cathay Pacific Airways
  • Lufthansa
  • Hainan Airlines
  • Garuda Indonesia
  • Thai Airways

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்