உலகின் கடைசி அமேசான் காட்டுவாசிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் வாழ்ந்த கடைசி காட்டுவாசி விவசாயிகளால் கொல்லப்பட்ட நிலையில் அவரின் வீடியோ வெளியாகியுள்ளது.

குறித்த காட்டுவாசி கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1996-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் காட்டில் அவர் நடமாடும் போது அரசு அதிகாரிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரொண்டோனியா மாகாணத்தில் உள்ள அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில் காட்டுவாசி கம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி பன்றி, பறவைகளை வேட்டுயாடுகிறார்.

இந்த காட்டுவாசி கொல்லப்பட்ட சமயத்தில் மேலும் ஐந்து காட்டுவாசிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஆனால் காட்டுவாசி ஏன் கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்