திடீரென கோடீஸ்வரியாக மாறிய பெண்: ஒரு மணி நேரத்தில் நடந்த மாற்றம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

புளோரிடாவை சேர்ந்த 26 வயது பெண்மணி சில மணி நேரம் மட்டும் கோடீஸ்வரியாக இருந்துள்ளார்.

26 வயதான எலென் பிளி்மிங் என்ற பெண்மணியின் வங்கி கணக்கில் வெறும் 50 டொலர் மட்டுமே இருப்பு தொகையாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் இவரது வங்கி கணக்கில் திடீரென 1.1 மில்லியன் டொலர் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இதனை தனது அலுவலகத்தில் இருந்தவாறு மொபைல் ஆப்பில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த பணத்தினை பார்த்த இவர், தனது பணியினை ராஜினாமா செய்துவிட் டு மாணவர் கடன்களை செலுத்தலாம் என முடிவு செய்துள்ளார். இவருக்கு பணம் வருவதற்கு முன்னர், டிடி அம்ரிடிரேடு (TD Ameritrade) என்ற நிதிய ஆலோசகரிடம் இருந்து வாய்ஸ் மெயிலை பெற்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவரது கணக்கில் மில்லியன் பணம் போடப்பட்டுள்ளது. இதனால் இதனை உண்மை என நம்பியுள்ளார். பின்னர் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள, தனது வங்கி கணக்கில் போட்டப்பட்ட பணம் தொடர்பான விவரத்தை சொன்னபோது, மன்னிக்கவும், இது உங்களது பெயரை கொண்ட மற்றொரு பெண்ணுக்கு போடப்பட் வேண்டிய பணம் மாறுதலா உங்களது வங்கி கணக்கிற்கு டெபாசிட் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட பிளிமிங், தான் சிலமணி நேர கோடீஸ்வரியாக இருந்துள்ளேன் என கூறி புன்னகைத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்