யூத நாடு: இஸ்ரேலில் புதிய சட்டம் நிறைவேற்றம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இஸ்ரேல் என்ற நாடு உருவானது.

அப்போது, மதம், இனம் பாலின பாகுபாடு ஏதுமின்றி அனைவருக்கும் உரிமைகள் வழங்கி சுதந்திரம் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 62 எம்பிக்களும், எதிராக 55 பேரும் வாக்களித்துள்ளனர்.

அத்துடன் ஒன்றிணைந்த ஜெருசலேத்தை தலைநகராகவும், ஹீப்ரூ மொழிக்கு மட்டுமே முதலிடமும் வழங்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயக படுகொலை என பாலஸ்தீன தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers