கடவுளின் கைகளில் கட்டப்பட்ட பாலம்: அந்தரத்தில் நிற்கும் அதிசய கட்டிடம்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வியட்நாமில் கட்டப்பட்டு இருக்கும் ''காவ் வாங்க் கோல்டன்'' பாலம் தற்போது உலகம் முழுக்க பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வியட்நாமின் Trường Sơn மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 100 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தற்போது இந்த பாலம் பலரது கவனத்தை பெற முக்கிய காரணம் இருக்கிறது.

இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது போல, பெரிய இரண்டு கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த பாலம் கடவுளின் கைகள் கொண்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் இந்த பகுதி தற்போது உலகம் முழுக்க பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

வியட்நாமில் பானா மலைப்பகுதியில் காவ் வாங்க் கோல்டன் பாலத்தில்தான் இந்த கடவுளின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது.

இரண்டு கைகள் விரிந்து வந்து பாலத்தை தாங்கி பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கைகளும் அங்கு இருக்கும் மலையில் இருந்து வருவது போல கான்கிரீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருடமாக தீவிரமாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம், கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. டிஏ லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தை சிறந்த வு வியட் ஆன் இதை வடிவமைத்து இருக்கிறார்.

ஆனால் இந்த கோல்டன் பாலம் ஏற்கனவே கட்டப்பட்டது. இதில் இருக்கும் கை பகுதிதான் இப்போது கட்டப்பட்டது.

150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 1919ல் கட்டப்பட்டது. பிரென்ச் காலணி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் இது.

இந்த பாலம் கட்டப்பட்டபின் அந்த பகுதியில் நிறைய சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

தற்போது அங்கு கைகள் இணைக்கப்பட்டு இருப்பதால் அதிக பயணிகள் குவிகிறார்கள். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அங்கு பயணிகள் குவிந்து வருகிறார்கள். அதேபோல் இதன் புகைப்படமும் உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்