சுவீடனில் அரச கிரீடங்கள் கொள்ளை: விரைவு படகில் தப்பித்த கொள்ளையர்கள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சுவீடனில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச கிரீடங்களை கொள்ளையடித்த நபர்கள், விரைவு படகில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவீடனில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அரசர் 9ஆம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா தி எல்டர் ஆகியோரது கிரீடங்கள், Stockholm நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கிரீடங்கள் அவர்களது கல்லறை வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். அதாவது, இந்த கிரீடங்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் மதிப்பு குறைவானவையாகும்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு திருடர்கள், பார்வைக்காக Showcase-யில் வைக்கப்பட்டிருந்த இந்த கிரீடங்களை திருடிக்கொண்டு, விரைவுப்படகு மூலம் மலார் ஏரியில் தப்பிச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பொலிசார், திருடர்களைப் பிடிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், மலார் ஏரியானது 8,000 குட்டித் தீவுகளை உடைய பெரிய ஏரியாகும். இதனையொட்டி பல நகரங்கள் அமைந்துள்ளன. எனவே, அனைத்து பகுதிகளில் இருந்து தேட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, தேவாலயத்தின் Dean கிறிஸ்டோபர் லாண்ட்கிரென் கூறுகையில், ‘திருடப்பட்ட கிரீடங்கள் முழுவதும் வைரங்களால் ஆனது அல்ல. படிகக் கற்கள் மற்றும் முத்துக்களால் ஆனவை ஆகும்.

திருடர்கள் அவற்றின் மதிப்பினை அறியாமல் திருடியுள்ளனர். குறித்த கிரீடங்கள் உருகும் தன்மையுடையவை ஆகும். இதனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

ஆனால், அவை ஐரோப்பாவில் எங்கு ஏலத்தில் விடப்பட்டாலும் திருடர்கள் நிச்சயம் மாட்டிக் கொள்வார்கள். ஏனெனில், அவை விற்பனை செய்வதற்காகவோ அல்லது காட்சிக்காகவோ உருவாக்கப்பட்டவை அல்ல’ என தெரிவித்துள்ளார்.

Swedish Police/EPA

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்