என் மகன் அப்படிபட்டவன் இல்லை! முதன்முறையாக மனம்திறந்த ஒசாமா பின்லேடனின் தாய்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அவன் ஒரு நல்ல பையன், அவனை மூளைச்சலவை செய்து விட்டார்கள் என்று தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் தாய் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஒசாமா பின் லேடனின் தாயான Ghanem, தனது மகன் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவன் காரணமல்ல என்றும் அவன் எப்படியோ வழி தவறி விட்டான் என்றும் கூறினார்.

பல ஆண்டுகளாக பயங்கர தீவிரவாதியாகக் கருதப்படும் ஒசாமா பின் லேடன் 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டான்.

தனது முதல் கணவருக்குப் பிறந்து இரண்டாவது கணவரால் வளர்க்கப்பட்ட தனது மகன், இளைஞனாக இருக்கும்போது ஒரு மதவாதக் குழுவால் மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டதாக Ghanem தெரிவிக்கிறார்.

The Guardian

Jeddahவிலுள்ள King Abdulaziz Universityயில் பொருளாதாரம் பயின்ற ஒசாமா பின் லேடன், பல்கலைக்கழகத்தில் சிலரால் மாற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் அவர்.கூச்ச சுபாவமுள்ள ஒரு பையனாக இருந்த அவன் சில குறிப்பிட்ட மதவாதிகளைச் சந்தித்தபின் வேறு ஒரு மனிதனாக மாறிவிட்டான் என்று தனது மகனைக் குறித்து கூறும் Ghanem, அவர்களிடமிருந்து விலகியிரு என்று அவனுக்கு சொல்லியும் அவன் என்ன செய்கிறான் என்பதை எனக்கு சொல்லவேயில்லை, காரணம் அவன் என்னை அவ்வளவு நேசித்தான் என்கிறார்.

தனது மகனைக் குறித்து தான் வெட்கப்படவில்லை என்று கூறும் Ghanem, அவனது கூட்டாளிகள்தான் அவனை மாற்றி விட்டார்கள் என்கிறார்.

சவுதி அரேபியாவில் அவரது குடும்பம் ஒரு பெரிய செல்வந்தக் குடும்பம் என்பதால் தங்கள் கடந்த காலத்தை உதறிவிட்டு ஒரு புதிய வாழ்வை தொடங்க நினைத்தாலும் ஒசாமா பின் லேடனின் மகனான Hamzaவும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த காலத்திலிருந்து அவரது குடும்பத்தால் மீள முடியவில்லை.

உலகம் முழுவதிலுமுள்ள உளவுத்துறை ஏஜன்சிகள் இன்னும் கண் கொத்திப் பாம்பாய் ஒசாமா பின் லேடனின் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்