பாய்ந்து செல்லும் ஏவுகணைகள்... தொடர்ந்து நடைபெறும் கால்பந்து விளையாட்டு: அதிர்ச்சி வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

யேமன் நாட்டில் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளுக்கு நடுவே கால்பந்து விளையாட்டு மும்முரமாக நடைபெற்று வரும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பகீர் கிளப்ப வைத்துள்ளது.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், வான் எல்லையை பாதுகாக்கும் பொருட்டு எச்சரிக்கை நிமித்தம் Patriot ஏவுகணைகளை வீசியதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக யேமனில் உள்நாட்டு யுத்தம் உச்சத்தில் இருந்து வருகிறது.

1990 காலகட்டத்தில் இருந்தே யேமன் நாட்டை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரிக்க கோரிக்கை எழுந்து வருகிறது.

வெள்ளியன்று கிளர்ச்சியாளர்கள் கைவசம் இருக்கும் Hudaydah நகரத்தை குறிவைத்து சவுதி அரேபியா கூட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

வியாழனன்றும் அங்குள்ள மீன் சந்தை மற்றும் மருத்துவமனையின் ஒருபகுதி என வான் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 50 பேருக்கான உடனடி மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

6 வாரங்களுக்கு முன்னர் சவுதி கூட்டுப்படைகள் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் குறித்த நகரத்தில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இருவேறு திடீர் தக்குதல்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே வெளியான வீடியோ ஒன்றில், கால்பந்து விளையாட்டு மும்முரமாக நடைபெறுகிறது. அப்போது வானத்தை கிழித்துக் கொண்டு ஏவுகணைகள் சீறிப்பாய்கின்றன.

இருந்தும் கால்பந்து விளையாட்டு நடைபெறுகிறது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

யேமனில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டு போரால் இதுவரை சுமார் 10,000 அப்பாவி மக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

2 மில்லியன் மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers