சிறு வயது கனவு: சகோதரர்களை திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் ஒகியோ மகாணத்தில் இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்

32 வயதான Brittany மற்றும் Briana Deane ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார். இவர்கள் இருவரும் எப்படி இரட்டை சகோதரிகளாக இருக்கிறார்களோ, அதே போன்று இரட்டை சகோதரர்களாக பிறந்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இவர்களது ஆசையாக இருந்துள்ளது.

தற்போது, இவர்களின் ஆசை நிறைவேறி, சகோதரிகள் இருவருக்கும் கோலகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களை போன்ற இரட்டை சகோதரர்களான 34 வயதான Josh மற்றும் Jeremy Slayers ஆகிய இருவரை திருமணம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து Brittany கூறியதாவது, இரட்டை சகோதரர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருந்தது. கடந்த ஆண்டு Twins Festival - இல் நாங்கள் கலந்துகொண்டபோது பலரை சந்தித்தோம். ஆனால் Josh மற்றும் Jeremy Slayers ஆகிய இருவரும் ஒரே பார்வையால் எங்கள் மனதை கவர்ந்தார்கள்.

உடனடியாக அவர்களது வயது மற்றும் விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டோம். அதன்பின்னர், கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் காதலித்து வந்தோம், தற்போது எங்கள் ஆசைப்படியே திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பிறகு தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். இதே போன்று எங்கள் குழந்தைகளையும் வளர்ப்போம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்