ஜப்பானில் கரை ஒதுங்கிய நீலத்திமிங்கலம்: பார்க்க குவியும் பொதுமக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஜப்பானில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள நீல திமிங்கலத்தை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.

ஜப்பானின் Kanagawa Prefecture கடற்கரை பகுதியில், நீரின் மேற்பரப்பில் மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று மிதந்து வருவதை பார்த்த பொதுமக்கள் ஆரம்பத்தில் அச்சமடைந்து கடலை விட்டு வெளியேறியனார்.

பின்னர் பாதுகாப்பு படையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அதனை உற்று கவனிக்கும்போது, திமிங்கலம் இறந்த நிலையில் மிதந்து வருவது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து டோக்கியோவின் தேசிய அருங்காட்சியகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களை சந்தித்து தகவல் வெளியிட்டனர். அதில், திமிங்கலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்திருக்க வாய்ப்புள்ளது. 10.52 மீட்டர் நீளம் கொண்ட இந்த திமிங்கலம் கடந்த ஜனவரி மாதம் பிறந்திருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

உலகில் உள்ள உயிரினங்களும் மிக நீளமாக வளரக்கூடிய நீலத்திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 150 டன் எடை வரை வளரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்