குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
217Shares
217Shares
lankasrimarket.com

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு, அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை 10ஆம் திகதி, தாய்லாந்து குகையில் சிக்கி தவித்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என 13 பேர், மிகப்பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மீட்கப்பட்ட சிறுவர்களில் 3 பேரும், பயிற்சியாளரும் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால், அவர்களுக்கு இதுவரை தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், அவர்கள் நான்கு பேருக்கும் தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

இதனை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் கூறுகையில், சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் தாய்லாந்து அரசு அவர்களுக்கு முறையான அடையாளத்தை வழங்கியுள்ளது. த

ற்போது சமூகத்தின் முழு உறுப்பினராக இருந்தவாறு அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்