ஒரு நகரத்தையே அச்சத்தில் உறைய வைத்த பேய்.. அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிவேகமாக வாகனங்கள் செல்ல கூடிய சாலையில், மர்ம உருவம் ஒன்று மெதுவாக சாலையை கடக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Pangasinan மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், உடல் இல்லாத உருவம் அதிவேகமாக போக்குவரத்து வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையை, எந்தவித பதட்டமும் இல்லாமல் பொறுமையாக கடக்கிறது.

அந்த உருவம் சாலையை கடக்கும்பொழுது, லாரி உட்பட சில வாகனங்கள் மோதி செல்கின்றன. ஆனால் அந்த உருவம் தன்னுடைய நடைப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வதை போல அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் கூறுகையில், கடந்த ஜூன் மாதத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, எதிரில் இருந்த கடையில் இருந்து டெலிவரிக்கு செல்லும் பையன்போல ஒரு பேய் நடந்து செல்வதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நகரத்தில் சில நாட்களுக்கு முன்பு இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான். அவன் தான் பேராசையுடன் சுற்றி திரிகிறான் என ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மற்றும் ஒருவர் கூறுகையில், நான் பேய் இருப்பதை எல்லாம் இதுவரை நம்பியதில்லை. ஆனால் இந்த வீடியோ பார்த்ததிலிருந்து நகரத்தில் தனியாக செல்லவே பயமாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்