பூங்கா ஊழியரை காலில் மிதித்து துவைத்த நெருப்புக் கோழி! காப்பாற்றிக் கொள்ள போராடிய நபரின் பரிதாப வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பூங்கா ஊழியர் ஒருவர் நெருப்புக் கோழியிடம் சிக்கி தவித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் பென்ஸா என்ற உயிரினப் பூங்கா உள்ளது. அங்கு பல விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பூங்காவில் வரிக்குதிரையும், நெருப்புக் கோழியும் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

அப்போது, வரிக்குதிரையை இடம் மாற்ற செய்ய விரும்பிய விலங்கியல் ஊழியர் ஒருவர் அந்தக் கூண்டுக்குள் இறங்கினார்.

இதைப்பார்த்து ஆவேசமடைந்த நெருப்புக் கோழி அந்த ஊழியரை கீழே தள்ளி தனது கால்களால் பந்தாடியது. பலமுறை அவர் எழுந்திருக்க முயன்றும் சரமாரியாக அவரை மிதித்துத் துவைத்தது.

இறுதியில் பலத்த போராட்டத்திற்கு பின் அவர் தன்னை தற்காத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்