கணவனை கொலை செய்து படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவி! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
362Shares

உகாண்டாவில் கணவனை கொலை செய்து அவரை படுக்கையறையில் புதைக்க முயன்ற மனைவியை பொலிசார் பொலிசார் கைது செய்துள்ளனர்.

உகாண்டாவின் Buwambo Parish பகுதியில் இருக்கும் Lwesuubo கிராமத்தைச் சேர்ந்தவர் Harriet Nassali. 38 வயதான இவர் கடந்த 12-ஆம் திகதி தன்னுடைய கணவர் Sirajj Kawuma-வை மிகப் பெரிய கத்தியை வைத்து கொலை செய்துள்ளார்.

அதன் பின் அவரது உடலை படுக்கையறையில் புதைக்க முற்பட்ட போது, மாட்டிக் கொண்டுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Harriet Nassali-விற்கு புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே கணவனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

சம்பவ தினத்தின் போது Harriet Nassali கணவரான Siraje Kavuma-வை கொலை செய்துவிட்டு, வீட்டில் இருக்கும் படுக்கையறையில் 3 அடிக்கு பள்ளம் தோண்டி புதைக்க முயன்றுள்ளார்.

இதைக் கண்ட அவரின் 13 வயது மகள் உடனடியாக அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Harriet Nassali-ஐ கைது செய்துள்ளனர்.

மேலும் இவரின் புதிய நண்பர் என்று கூறப்படும் Alex Kamusangi-யிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருதாகவும், இவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், இவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் 17 வயது சிறுமி பொலிசாரிடம் கூறுகையில், எங்கள், அப்பா, அம்மா இருவரும் சந்தோசமாக இருந்து பார்த்தது இல்லை, இருவருக்கும் ஏதேனும் பிரச்சனை வந்த படி இருக்கும், அதிலும் என் அம்மா அப்பாவை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்