உலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல்! முதலிடம் எதற்கு?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் என்ற பட்டியலை ECONOMIST INTELLIGENCE UNIT என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரமும், மூன்றாவது இடத்தில் ஜப்பானின் ஒசாகா நகரமும் இடம்பெற்றுள்ளன.

கனடா நாட்டில் கால்கேரி நகரம் நான்காவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் 5ஆவது இடத்திலும் உள்ளன.

இதில் முதல் 100 இடங்களில் இந்தியாவை சேர்ந்த ஒரு நகரம் கூட இடம் பெறவில்லை.

வாழ்வதற்கான சூழல் மோசமாக இருக்கும் நகரங்களுக்கான பட்டியலில், முதலிடத்தில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் இடம்பெற்றுள்ளது.

வாழ்வதற்கான சூழல் மோசமாக இருக்கும் நகரங்களில் பாகிஸ்தானின் கராச்சியும், பங்களாதேஷின் தாக்காவும் இடம்பெற்றுள்ளன.

The ten most liveable cities in 2018
 1. Vienna, Austria
 2. Melbourne, Australia
 3. Osaka, Japan
 4. Calgary, Canada
 5. Sydney, Australia
 6. Vancouver, Canada
 7. Tokyo, Japan
 8. Toronto, Canada
 9. Copenhagen, Denmark
 10. Adelaide, Australia
The ten least liveable cities 2018
 1. Damascus, Syria
 2. Dhaka, Bangladesh
 3. Lagos, Nigeria
 4. Karachi, Pakistan
 5. Port Moresby, Papua New Guinea
 6. Harare, Zimbabwe
 7. Tripoli, Libya
 8. Douala, Cameroon
 9. Algiers, Algeria
 10. Dakar, Senegal

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers