பிஞ்சு குழந்தையை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு விஷம் அருந்திய இளம் தாயார்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பொலிவியா நாட்டில் இளம் பெண் ஒருவர் தமது கணவருக்கு பிரியாவிடை கூறிவிட்டு பிஞ்சு குழந்தை உள்ளிட்ட தமது 3 பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

மேற்கு தென் அமெரிக்க நாடான பொலியாவில் 25 வயதேயான இளம் தயார் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக தமது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு அவரும் விஷம் அருந்தியுள்ளார்.

கடந்த பல மாதங்களாக குறித்த பெண்மணி தமது கணவருடன் மனஸ்தாபத்தில் இருந்து வந்துள்ளார்.

இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சொவ்வாய் அன்று தமது கணவருக்கு பிரியாவிடை கூறும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு, பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்றுள்ளார்.

பொலிசாரிடம் உள்ள குறித்த வீடியோவில் கொல்லப்பட்ட பிள்ளைகளும் தங்கள் தந்தைக்கு பிரியாவிடை கூறுகிறது.

இதனிடையே பிள்ளைகளை கொன்றுவிட்டு விஷம் அருந்திய அந்த தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் கொல்லப்பட்ட பிள்ளைகளின் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்