குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய பெண் பொலிசுக்கு பதவி உயர்வு: நேரில் அழைத்து பாராட்டிய ஜனாதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல்துறை அதிகாரி, அழுத குழந்தைக்கு பால் ஊட்டிய செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, செலஸ்டீ ஜேக்லின் அயிலா. அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், குழந்தைகள் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அச்சமயம் ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்று மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, அந்தக் குழந்தை பசியால் அழுதுள்ளது.

யாரும் அந்தக் குழந்தையைக் கவனிக்கவில்லை. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி செலஸ்டீ, அந்தக் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார்.

அதை ஒருவர் புகைப்படம் எடுத்து, நடந்தவற்றை விவரித்து பேஸ்புக்கில் பதிவிட்டார். அந்தப் பதிவு வைரலானது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஷேர் ஆனது.

இந்த விவகாரம், அந்நாட்டின் துணை ஜனாதிபதி கிரிஸ்டியன் ரிட்டான்டோவுக்குத் தெரியவர, செலஸ்டீயை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

மேலும், அவருக்கு காவல்துறை அதிகாரியிலிருந்து சார்ஜென்ட்டாகப் பதவி உயர்வும் அளித்துள்ளார். தாய்ப்பால் கொடுத்ததுகுறித்து விவரித்த செலஸ்டீ, 'நான், அந்தக் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முன்பு யோசிக்கவில்லை. இது சோகமான நிகழ்வு. அந்தக் குழந்தை அழுதது, என் ஆன்மாவை உடையச் செய்தது. குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் சமூகம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்