பாலியல் புகாரை மறுத்த பிரபல நடிகை: ஆதாரம் வெளியானதால் வீட்டுக்குள் முடங்கினார்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரபல தயாரிப்பாளர் Harvey Weinstein மீது பாலியல் புகார் கூறிய நடிகையான Asia Argento மீதே பாலியல் புகார் எழ, அவர் தன் மீது கூறப்பட்ட புகாரை மறுத்தார்.

இந்நிலையில் அவர் மீது புகாரளித்த இளம் நடிகரான Jimmy என்னும் நடிகருடன் ஆடையின்றி இருக்கும் புகைப்படம் வெளியானதால் தான் பங்கேற்க இருந்த பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு வீட்டுக்குள் முடங்கினார்.

Jimmyயுடன் அவர் முறை தவறிய உறவு வைத்துக் கொண்டபோது Jimmyக்கு வயது 17 மட்டுமே, 17 வயதுக்கு உட்பட்டவருடன் பாலுறவு வைத்துக் கொள்ளுவது சட்டப்படி குற்றமுமாகும்.

முதலில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்த Argento, தனது நண்பர் ஒருவருக்கு மொபைலில் அனுப்பிய செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரசுரிப்பதற்கு இயலாத அளவில் ஆபாசமாக இருக்கும் அந்த செய்திகள் அவர் Jimmyயுடன் உறவு கொண்டதை உறுதி செய்கின்றன.

இதற்கிடையில் தான் Jimmyயுடன் உறவு கொண்டபோது அவருக்கு 17 வயது என்பது தனக்கு தெரியாது என்றும் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிர்வாண புகைப்படம் வெளியானதால், நெதர்லாந்தில் நடைபெறும் Le Guess Who என்னும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த Argento, அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற இருந்த திட்டத்தை ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்