முதல் முறையாக கெமராவில் சிக்கிய அமேஸான் ஆதிவாசிகள்: அபூர்வ வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வெளியுலகுடன் தொடர்பே இல்லாத ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த 16 பேர் ட்ரோன்கள் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பல ஆதிவாசிகள் நடமாடும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வடக்கு பிரேசிலின் மேற்கு பகுதியில் வெகு தொலைவில் அமைந்துள்ள அடர்த்தியான அமேஸான் காட்டுப் பகுதியில் இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகவும், படக்குழுவினரின் உயிருக்கு அவர்களால் ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ட்ரோன்களின் உதவியால் எடுக்கப்பட்டுள்ளன.

ஆதிவாசி ஒருவர் கையில் வில் அம்புடன் நடப்பதும் வீடியோவின் வலது மூலையில் இன்னும் பல ஆதிவாசிகள் நடமாடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளன.

அந்த ஆதிவாசிகள் பயன்படுத்துவதாக கருதப்படும் கோடாரி ஒன்றின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அவர்கள் நதியில் பயணிக்க பயன்படுத்தும் படகு மற்றும் கிழங்கு செடிகள் என்று நம்பப்படும் தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள maloca என்று அழைக்கப்படும் அவர்களது வீடு ஆகியவற்றின் அபூர்வ புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த ஆதிவாசிகளை படம் பிடித்த குழுவினர் அவர்களை தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.

அவர்களது தனைமையை மதிப்பதாகவும், இப்படி ஒரு ஆதிவாசி இனத்தவர் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவுமே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்