சர்ச்சைக்குரிய புகைப்படம்: சிங்கப்பூரில் சிக்கலில் மாட்டிய இந்திய இளைஞர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் அந்நாட்டு தேசியக்கொடியை அவமதிக்கும் வண்ணம் போட்டோ பதிவிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபரான அவிஜித் தாஸ் பட்நாயக் அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 14-ம் திகதி இந்திய சுதந்திர தினத்தின் முதல் நாளன்று ‘சிங்கப்பூர் இந்தியர்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டார்.

அதில் சிங்கப்பூரின் தேசிய கொடியை இரண்டு கைகள் கிழிப்பது போலவும், அதனுள் இந்திய கொடி தெரிவது போலவும் அந்த போட்டோவில் இருந்துள்ளது.

மேலும், ‘இன்னும் எந்தன் இதயத்தில்’ என்ற அர்த்தம் தரும் இந்தி பாடல் வரிகளையும் அவிஜித் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த சிங்கப்பூர் வாசிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான புகார் பொலிசுக்கும் சென்றது. பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவிஜித் பணியாற்றும் வங்கியும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியது வரும். மேலும், வேலையும் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், தனது செயலுக்கு அவிஜித் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...