மரணதண்டனையிலிருந்து தப்பிய இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! உயிர்தப்புவாரா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
359Shares

சூடானில் கணவனை குத்தி கொலை செய்த மனைவி மரணதண்டனையிலிருந்து தப்பிய நிலையில், அவருக்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சூடானைச் சேர்ந்த Noura Hussein(19) என்ற இளம் பெண், கடந்த கணவனை குத்தி கொலை செய்ததன் காரணமாக மே மாதம் அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

அதன் பின் சூடான் நாட்டின் சட்டப்படி மறுபரிசீலனை செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை 5 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டின் அரச வழக்கறிஞர்கள் அவருக்க சிறைதண்டனை போதாது மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் Noura Hussein வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Noura Hussein 16 வயது சிறுமியாக இருக்கும் போது திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ஆனால் சிறுமிக்கு இதில் விருப்பம் இல்லாத காரணத்தினால் பெற்றோருடன் செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் இவர் மாமியாரின் வீட்டில் மூன்று ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது சிறுமியின் கணவர் இவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்