60 அடி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து: 15 பேர் உடல் நசுங்கி பலி, பலர் படுகாயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பல்கேரியாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து ஒன்று முன்னால் சென்ற இரு கார்களில் மோதி 60 அடி பள்ளத்தில் சரிந்து விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த கோர விபத்தில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 27 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 5.10 மணியளவில் சோஃபியா நகரில் இருந்து சுமார் 20 கி.மீ வடக்கில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடுமையான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து முன்னால் சென்ற இரு கார்களில் மோதி பின்னர் 60 அடி பள்ளத்தில் சரிந்துள்ளது என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

வார இறுதி நாளை கொண்டாடும் வகையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவ பகுதிக்கு 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ உதவிக் குழுக்களுடன் விரைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...