பிறந்து 6 வாரங்களே ஆன என் குழந்தையை ஏன் விற்றேன்! கண்ணீர் மல்க கூறிய தாய்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தையை செல்போனுக்காக தாய் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் Anambra மாநிலத்தின் Onitsha பகுதியைச் சேர்ந்தவர் Johnson Kokumo. 25 வயதான இவர் தனக்கு பிறந்து ஆறு வாரமே ஆன குழந்தையை 9,77,429-ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

என்னுடைய கணவரும் வேலையின்றி தவித்து வருவதால், ஒரு வருமானமும் இல்லை. குழந்தையை பார்த்து கொள்வதற்கும் வழி தெரியவில்லை.

இதனால் குழந்தையை விற்று புதிததாக ஒரு போன் மற்றும் மீதிப் பணத்தை கணவர் தொழில் துவங்குவதற்காக கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

குழந்தை கடந்த ஜுலை மாதம் 2-ஆம் திகதி பிறந்தது, அதன் பின் ஆறு வாரங்கள் கழித்து குழந்தையை விற்றேன், இதில் என் கணவருக்கு உடன்பாடில்லை என்று கண்கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.

மேலும் இவரின் கணவர் கூறுகையில், நான் அவளிடம் பொறுமையாக இருக்க சொன்னேன், இதைப் பற்றியே நினைக்காதே, மறந்துவிடு என்று கூறினேன். ஆனால் அவள் இப்படி செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்