ஆக்டோபஸிடம் சிக்கிக் கொண்ட ஆழ்கடல் நீச்சல் வீரர்: தப்பித்த திக் திக் நிமிடங்கள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர், படம்பிடிக்க முயன்றபோது ஆக்டோபஸிடம் சிக்கி நீண்ட போராட்டத்திற்கு பிறகு தப்பித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் டிமிட்ரி ருடாஸ். இவர் கடலுக்கு அடியில் வசிக்கும் உயிரினங்களை படம்பிடிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், டிமிட்ரி ரஷ்ய கிழக்குப் பகுதியில் உள்ள பிரைமோர்ஸ்கி கிராய் எனும் கடலில் இறங்கி, கமெரா மற்றும் உரிய உபகரணங்களுடன் கடல்வாழ் உயிரினங்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது அருகில் வந்த மிகப் பெரிய ஆக்டோபஸ் ஒன்று அவரை தனது கைகளால் பற்றிக்கொள்ள முயன்றது. இதில் அவரது கமெரா பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு சென்றது.

உடனே, சுதாரித்துக் கொண்ட டிமிட்ரி தன்னை ஆக்டோபஸிடம் இருந்து விடுவித்துக் கொண்டார். எனினும், ஆக்டோபஸ் கமெராவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

அதன் பின்னர் டிமிட்ரி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், கமெராவை மீட்டுக் கொண்டு கடலின் மேல் மட்டத்திற்கு வந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers