கானாவில் 12 வயது மகளை தந்தை பலாத்காரம் செய்ததில் மகள் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த தகவலை தொலைக்காட்சி தொகுப்பாளினியான சிந்தியா திமா வெளியிட்டுள்ளார்.
12 வயதான சிறுமியை அவரின் தந்தை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார்.
இதையடுத்து வயிறு வலியால் துடித்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிசேரின் மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது.
மருத்துவமனை பில் பணத்தை கூட கட்ட முடியாமல் சிறுமி தவித்த நிலையில் அவருக்கு சிலர் பண உதவி செய்துள்ளார்கள்.
இந்த கொடுமையான செயலில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டாரா என்ற விபரம் தெரியவில்லை.