உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் உகாண்டா முதலிடம் பிடித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், சுமார் 168 நாடுகளில் சுறுசுறுப்பான மக்கள் குறித்து ஆய்வு நடத்தியது.
இதில் உடற்பயிற்சி, மக்களின் சுறுசுறுப்புத் தன்மை, விழித்திருக்கும் தன்மை, காலையில் எழுதல் உட்பட பல்வேறு காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதற்கான பட்டியலில் உகாண்டா நாட்டு மக்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
இங்குள்ளவர்களில் 5.5 சதவிகித மக்கள் மட்டுமே போதுமான அளவில் உடற்பயிற்சி இல்லாமல் இருக்கின்றனர்.
கடைசி இடத்தில் குவைத் நாட்டு மக்கள் இடம்பிடித்துள்ளனர், இங்கு சுமார் 67 சதவிகிதம் பேர் சோம்பேறிகளாக இருக்கின்றனர்.
குவைத் தவிர்த்து, அமெரிக்கன் சமோ, சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளிலும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சோம்பேறிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.