முஸ்லீம் பெண்ணுடன் ஹோட்டலில் வீடியோ எடுத்த இளைஞர் கைது!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் உள்ள ஹோட்டலில் முஸ்லீம் பெண்ணுடன் வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகளவில் சவுதி அரேபியா எண்ணெய் ஏற்றுமதி, பொருளாதாரம் என வளர்ச்சியடைந்து காணப்பட்டாலும், இன்னும் பெண்களுக்கு எதிரான கெடுபிடியான சட்டங்களை கடைப்பிடித்து வருகிறது.

இது தங்களுடைய மரபு என்றும் அதனை மீறினால் நிச்சயமாக கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் எகிப்திய இளைஞர் ஒருவர் முஸ்லீம் பெண்ணுடன் காலை உணவருந்திவிட்டு, வீடியோ எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையவாசிகளால் அதிகளவு பகிரப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியா தொழிலாளர் அமைச்சகம் எகிப்திய மனிதரை கைது செய்ததுடன், விசாரணைக்காக ஹோட்டல் உரிமையாளரையும் அழைத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய தொழிலாளர் அமைச்சகம், முஸ்லீம் பெண்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகளை மீறியதால் உரிமையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும், சவுதி விதிமுறைகளை மீறியதால் தான் எகிப்திய இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்