கர்ப்பிணி தாயார் சாப்பிட்ட சூப்பில் இறந்த எலி: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
167Shares
167Shares
lankasrimarket.com

சீனாவில் பிரபல உணவகம் ஒன்றில் உணவருந்திய கர்ப்பிணி தாயாருக்கு வழங்கப்பட்ட சூப்பில் எலி செத்து மிதந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் வெளியான நிலையில் அந்த பிரபல நிறுவனத்தின் மொத்த மதிப்பில் சுமார் 145 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு சரிவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6-ஆம் திகதி தமது கணவருடன் சியாபு சியாபு என்ற பிரபல உணவகத்தில் குறித்த கர்ப்பிணி தாயார் உணவருந்த சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட சூப்பில் செத்த எலி ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர் உணவக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிசுவுக்கு ஆபத்து ஏற்படும் என கருதி கருச்சிதைவு நடத்த திட்டமிட்டால் அதன் மருத்துவ செலவை உணவ நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இச்சம்பவம் சீனா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நிறுவனத்தின் மதிப்பானது சுமார் 145 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்