பிஞ்சு குழந்தையை அசால்ட்டாக குப்பை தொட்டியில் வீசிச் சென்ற இரக்கமற்ற பெண்! வெளியான சிசிடிவி காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் பிறந்த குழந்தையை பெண் ஒருவர் வாளியில் வைத்து கொண்டு வந்து, அங்கிருக்கு குப்பை தொடட்டியில் அசால்ட்டாக தூக்கி எறியும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் துப்புரவு பணியாளர் ஒருவர் அங்கிருக்கும் குப்பை தொட்டியை சுத்தம் செய்வதற்காக பார்த்த போது, உள்ளே இறந்த நிலையில் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

அதன் பின் இது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியதால், அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில் பட்டப்பகலில் பொதுமக்கள் பலரும் நடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், சாதரணமாக வந்த பெண் சிவப்பு நிற வாளியை அந்த தொட்டியில் வீசியுள்ளார்.

அந்த வாலியின் உள்ளே தான் இந்த குழந்தை இருந்துள்ளது. ஆனால் குழந்தை இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதா? அல்லது உயிருடன் இருக்கும் போதே தொட்டியில் வீசப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

தொட்டியில் வீசப்பட்ட அந்த குழந்தை சுமார் 3.5 கிலோ இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers