நடுவானில் விமான பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர்: வைரலாகும் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இளைஞர் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருபவர் எக்ஸ்யோமி. இவர் கடந்த மே மாதம் பணியில் இருக்கும் போது, விமானத்தில் பயணித்த அவருடைய நண்பர் திடீரென தன்னுடைய காதலை கூறியுள்ளார்.

அதனை எக்ஸ்யோமி ஏற்றுக்கொண்டதும், அந்த இளைஞர் உற்சாக மிகுதியில் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுக்கிறார்.

இதனை பார்த்த பயணிகள் அனைவரும் உடனடியாக தங்களுடைய செல்போன்களில் படம்பிடிக்கின்றனர். அதில் ஒரு நபர் வீடியோவினை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, விமான நிர்வாகத்தின் பார்வைக்கு வீடியோ சென்றுள்ளது.

இதனையடுத்து கடந்த 10-ம் தேதி சம்மந்தப்பட்ட பணிப்பெண்ணை பணிநீக்கம் செய்து நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விமான நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் பயணிகளுக்கு கொந்தளிப்பினை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்