ஆய்வுகளுக்காக சித்திரவதை செய்யப்படும் குரங்குகள்: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தின் பிரபல ஆய்வகம் ஒன்றில் குரங்குகள் சித்திரவதை செய்யப்படும் காட்சியை ரகசிய கெமரா மூலம் விலங்குகள் ஆர்வலர்கள் படம் பிடித்துள்ளனர்.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில் குரங்குகள் கூண்டுகளுக்குள் அச்சுறுத்தி துரத்தப்பட்டு மயக்க ஊசிகள் போடப்படுவதும், எளிதில் அடையாளம் காண்பதற்காக அவற்றிற்கு பச்சை குத்துவதும் பதிவாகி மனதை பதறச் செய்கிறது.

மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் பச்சை குத்தும்போது ஏற்படும் பயங்கர வலியை அவைகளால் உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகளுக்குப் பின் மீண்டும் கூண்டுகளுக்குள் அடைக்கப்படும் குரங்குகள் மயக்கம் சரியாக தெளியாத நிலையில் படிகளில் ஏற முயல்வதும், அவற்றால் சரியாக ஏற இயலாமல் மீண்டும் மீண்டும் கீழே விழுவதால் பயங்கரமாக காயமடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இனி ஆய்வுகளுக்கு பயன்படாது என கருதப்படும் குரங்குகள், தங்கள் சக குரங்குகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதைக் காணும் வகையில் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன.

மற்ற குரங்குகள் மீது சோதனைகள் நடத்தப்படுவது இந்த குரங்குகளுக்கு பயங்கர அச்சத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

வெளியான இந்த வீடியோவைக் கண்ட Jane Goodall Instituteஇன் நிறுவனரும் சமாதானத்திற்கான ஐக்கிய நாடுகளின் தூதருமான Jane Goodall, அது அதிர்ச்சியளிப்பதாகவும் மனிதாபிமானமற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இப்படி உயிருள்ள குரங்குகள் மேல் ஆய்வுகள் செய்வதற்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்