பணத்திற்காக காதலியை கொலை செய்த இளைஞர்: மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தில் கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தராத காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனின் தண்டனை காலத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.

லெபனான் நாட்டவரான 31 வயது இளைஞரே கடனை திருப்பி செலுத்தாத கோபத்தில் காதலியை கொலை செய்த நபர்.

இந்த வழக்கு விசாரணையில் கொலை குற்றம் நிரூபணமானதை அடுத்து குறித்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இளைஞருக்கு சாதகமாக தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்த சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்துள்ளது.

முன்னதாக குறித்த இளைஞரிடம் இருந்து வியட்நாம் நாட்டவரான அவரது காதலி 63,000 திர்ஹாம் பணம் கடமாக வாங்கியுள்ளார்.

தமக்கு தேவை என்ற நிலையில் பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞரை அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தர வேண்டிய பணம் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், ஒருகட்டத்தில் கோபத்தில் அவரது காதலியை கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு கமெராவில் சிக்கிய இளைஞரை விசாரணைக்கு உட்படுத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers