29 பேரை பலி வாங்கிய பயங்கரவாத தாக்குதல்! காரணம் அந்த நாடு தான்: விரல் நீட்டும் ஈரான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் ராணுவ அணிவகுப்பின் இடையே ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா உடந்தை என அந்த நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஹ்வாஸ் நகரில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் மீது கும்பல் ஒன்று திடீர் தாக்குதல் மேற்கொண்டது.

இதில் சிறார்கள், பெண்கள் உள்ளிட்ட 29 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 60-கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலர் ஆபத்து கட்டத்தை இன்னமும் தாண்டாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும், ஈரானில் அரசுக்கு எதிராக போராடிவரும் அவாஸ் தேசிய இயக்கமும் பொறுப்பேற்றுள்ளன.

ஆனால் இந்த இரு குழுக்களுக்கும் ஆதரவாக அமெரிக்கா இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அரேபிய சிறுபான்மையினர் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அதை ஈரான் அரசுக்கு எதிராக சவுதி அரேபியா பயன்படுத்துவதாக முன்னர் ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்