கர்ப்பமாக இருப்பதாக கணவரை 9 மாதங்கள் ஏமாற்றிய பெண்: 10வது மாதத்தில் செய்த திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் கர்ப்பமாக இருப்பதாக கணவரை, 9 மாதங்கள் மனைவி ஏமாற்றி வந்த நிலையில் பத்தாவது மாதத்தில் வசமாக சிக்கியுள்ளார்.

ஆண்டோனீலா மிலீனா என்ற பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

கர்ப்பமாகாமல் இருந்து வந்த மலீனாவுக்கு இதன் காரணமாக கணவர் தன்னை பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக கணவரிடம் பொய் கூறியுள்ளார்.

அதன்படி தலையணையை வயிற்றில் மறைத்து வைத்து கர்ப்பிணி போல நடித்து வந்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாகவும் அடிக்கடி கூறிவிட்டு சென்ற மலீனா இணையத்தில் பிரிண்ட் அவுட் எடுத்த ஸ்கேனை கணவரிடம் காட்டி குழந்தை நன்றாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் கொடுத்த ஸ்கேன் என கூறியுள்ளார்.

9 மாதங்கள் இப்படியே போன நிலையில், பிரசவம் நெருங்கிய நேரத்தில் மலீனா மருத்துவனைக்கு செல்வதாக கூறி தனியாக சென்றுள்ளார்.

பின்னர் கணவருக்கு போன் செய்த அவர், தன்னை மருத்துவமனை செல்லும் வழியில் யாரோ கடத்தி சென்று வயிற்றிலிருந்து குழந்தையை வெளியில் எடுத்துவிட்டதாக கூறினார்.

குழந்தையை விற்பனை செய்ய இவ்வாறு செய்ததாக கூறினார்.

பின்னர் வீட்டுக்கு வந்த மலீனாவிடம் அது குறித்து விசாரித்த கணவர், அவரின் உடல்நிலை குறித்து கவலையடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அப்போது மலீனா உடலில் எந்தவொரு காயமும் இல்லை என்பதை கண்டுப்பிடித்த மருத்துவர் அவர் கர்ப்பமாகவே இல்லை என கூற கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இது குறித்து பேசிய மலீனாவின் மாமியார், எங்களுக்கு சந்தேகம் வராதபடி மலீனா எங்களை ஏமாற்றினார்.

அவர் இப்படி செய்தார் என நம்பமுடியவில்லை என கூறினார்.

இதனிடையில் மருத்துமனைக்கு கர்ப்பமாக இருப்பதாக கூறி பலமுறை பொய்யாக வந்து பொது வளங்களை வீணாக்கியதற்காக மலீனா மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்