பிலிப்பைன்ஸ் நாட்டில் புதுமண தம்பதியினர் முத்தம் கொடுப்பதை பார்த்த 10 வயது சிறுவன் உடனே எதிரில் நின்ற சிறுமிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Alfred Lu - Jamaica என்ற தம்பதியினர் தங்களுடைய திருமணம் முடிந்த கையோடு, ஆலயத்திற்கு வெளியில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் தங்களுடைய முதல் முத்தத்தை பரிமாறும் புகைப்படமும் எடுக்க இருந்தது. உடனே அங்கு கீழே நின்று கொண்டிருந்த சிறுவர்களை கண்ணை மூடிக்கொள்ளுமாறு, Alfred கூறினார்.
உடனே இருவரும் சமத்தாக கண்ணை மூடிக்கொண்டு நின்றனர். ஆனால் அந்த 10 வயது சிறுவன் மட்டும் ஒரு கையை லேசாக எடுத்து பார்த்துவிட்டு திரும்பவும் மூடிக்கொண்டார்.
அந்த சமயம் அனைவரின் கண்களும் முத்தம் கொடுக்கவிருந்த, புதுமண தம்பதியினரை நோக்கியே இருந்தது. இருவரும் இப்போது முத்தம் கொடுங்கள் என புகைப்பட கலைஞர் கூறியதும், கீழே நின்று கொண்டிருந்த அந்த 10 வயது சிறுவன், தன்னை தான் முத்தம் கொடுக்க கூறுகிறார்கள் என நினைத்து கொண்டு, எதிரில் நின்று கொண்டிருந்த சிறுமியை முத்தமிடுகிறார்.
இதனை பார்த்தும் அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பிக்கின்றனர்.