சிறுமிகளை வைத்து கவர்ச்சி விளம்பரம்: புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் கொந்தளிப்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் பிரபல நிறுவனம் ஒன்று உள்ளாடைகளை விளம்பரப்படுத்தும் முயற்சியாக சிறுமிகளை வைத்து கவர்ச்சி புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று 8 முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளை வைத்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளது.

உள்ளாடைகளை மட்டுமே அந்த சிறுமிகள் அணிந்திருக்கும் புகைப்படங்களை நிறுவனம் தங்களுடைய இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

இதனை பார்த்து அதிருப்தியடைந்த பொதுமக்கள் பலரும் அந்த ஆடை நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். எதிர்ப்பு வலுவானதை அடுத்து, அதே சிறுமிகளை வைத்து நடக்கவிருந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து உக்ரைன் பொலிஸ் சிறார் துறையின் தலைவர் Larisa Zub கூறுகையில், இந்த புகைப்படங்களானது காண்பவர்கள் மனதை சிதைக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அனைத்து சிறுமிகளும் அவர்களுடைய பெற்றோர் அனுமதியின் பின்னரே கலந்துகொண்டுள்ளனர்.

நாங்கள் தற்போது இதில் கலந்து கொண்ட சிறுமிகளின் வீட்டு முகவரிகளை சேகரித்து வருகிறோம். விரைவில் அவர்களுடைய பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்