மனைவியை நடுக்காட்டில் கட்டிப்போட்டு கையை வெட்டிய கணவன்! கூறிய காரணம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஸ்யாவில் மனைவியை கடத்தி நடுக்காட்டில் வைத்து கையை வெட்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Dmitry Grachyov (27) என்ற நபர், தன்னுடைய மனைவி Margarita (26) மற்றும் குழந்தைகளிடம் சில நாட்களாகவே வித்தியாசமாக நடந்து கொண்டு, அவர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த Margarita, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காரில் வந்த Dmitry, வலுக்கட்டாயமாக Margarita-வை ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு Margarita-வின் கைகளை கட்டி போட்டு, வலது கையை வெட்டி எடுத்துள்ளார்.

இந்த வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதனை நீதிபதி விசாரிக்கையில், நான் என்னுடைய மனைவியை துன்புறுத்தியால், விவாகரத்து கேட்பதோடு என்னுடைய குழந்தைகளை பார்க்க விடாமல் தடை செய்து என்னை பழி வாங்கினார். அதனால் தான் அவருடைய கையை வெட்டி எடுத்தேன் என Dmitry கூறியுள்ளார்.

பின்னர் வழக்கின் அனைத்து விசாரணைகளையும் கேட்டறிந்த நீதிபதி, மனைவியை துன்புறுத்தியது மற்றும் கொலை செய்ய முயற்சித்தது தொடர்பாக குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவத்தால் கையை இழந்த Margarita தற்போது செயற்கையாக ரோபோ கையை பயன்படுத்தி வாழ்க்கையினை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்