கேபிள் ஒயரில் சிக்கிக் கொண்ட விமானம்: தம்பதியின் திக் திக் தருணங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் சிறிய விமானம் ஒன்றில் பயணித்த ஒரு முதிர்ந்த தம்பதியினரின் விமானம் கேபிள் ஒயரில் சிக்கிக் கொள்ள, மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரால் அவர்கள் காப்பாற்றப்பட்ட திகில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Peter (60)மற்றும் அவரது மனைவியான Mary (60)இருவரும் காண்டாமிருகங்களை வேட்டையாடுபவர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு சிறிய விமானத்தில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக அவர்களது விமானம் ஒரு இரும்பு கேபிளில் சிக்கியது.

எப்போது விழுமோ என நடு நடுங்கி அவர்கள் உயிர்பயத்தில் உறைந்திருக்க, ஆபத்பாந்தவனாக வந்த மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் அந்த கேபிளின் மேல் பக்கத்திலிருந்து தொங்கியவாறே வந்து இருவரையும் மீட்டார்.

சுமார் 300 மீற்றர் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த தம்பதி, சற்று அசைந்தாலும் விமானம் விழுந்துவிடும் என்று எண்ணி மூச்சைப் பிடித்துக் கொண்டு, காற்றும் வராத அந்த சிறிய விமானத்திற்குள் பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றவர்களாக தொங்கிக் கொண்டிருக்கும்போது, மீட்புக்குழுவைச் சேர்ந்த Rob Thomas (51) கம்பியில் தொங்கியவாறு வந்து அந்த விமானத்திலிருந்த இருவரையும் மெதுவாக வெளியே வரச் செய்து கொக்கிகளுடன் அவர்களை இணைத்தார்.

பின்னர் மீட்புக் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் கயிறுகளின் உதவியால் அவர்களை மலையின் உயரமான ஒரு இடத்துடன் இணைக்கப்பட்டிருந்த கேபிளின் மறு முனைக்கு கொண்டு வந்தனர்.

Maryயின் செருப்புகள் கீழே விழுந்து விட்டதால் அவரால் நடக்க இயலவில்லை, அவரை மட்டும் ஹெலிகொப்டரில் அனுப்பி விட்டு மற்ற இருவரும் மலையிலிருந்து நடந்தே கீழிறங்கினர்.

தம்பதியினருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்