சாலை விபத்தில் சகோதரரை பறிகொடுத்த இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரகத்தின் உம் அல் குவைன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி சொந்த சகோதரரை இழந்த இளைஞர் நினைவுகளை இழந்து தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் கோழிகோடு பகுதியை சேர்ந்தவர் 32 வயதான சஜ்ஜித். இவரது சகோதரர் 27 வயதான சஜ்ஜீர்.

இவர்கள் இருவரும் பணி நிமித்தம் லொறி ஒன்றில் பொருட்களுடன் அருகாமையில் உள்ள நகருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் வாகனம் ஒன்று எதிர்பாராதவகையில் முந்திச் செல்ல, இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் சஜ்ஜித் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். அவரது சகோதரர் சஜ்ஜீர் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.

தலையில் பலத்த காயமேற்பட்டுள்ளதால், கோமா நிலையில் சஜ்ஜீர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த நிலையில் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னர் நினைவு திரும்பிய சஜ்ஜீர் தமது சகோதரரை தேடியுள்ளார்.

ஆனால் சஜ்ஜித் சாலை விபத்தில் கொல்லப்பட்ட தகவல் தெரிந்தால் அது அவரது உடல் நிலையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சஜ்ஜீரின் மருத்துவ செலவுக்காக 10 முதல் 15 லட்சம் ரூபாய் தேவைப்படும் எனவும், ஆனால் அவர்களது குடும்ப சூழல் அந்த தொகையை திரட்டுவார்களா என்பது சந்தேகமே என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்