அணு ஆயுத சோதனையை கைவிடுவதற்கு வாய்ப்பில்லை: வடகொரியா அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் விலக்கப்பட வேண்டுமென்று வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வட கொரியாவின் கருத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

இருப்பினும், வட கொரியா அணு ஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படுமென்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால், அணுஆயுத கைவிடலுக்கு முன்னிலை என்ற அமெரிக்காவின் வற்புறுத்தல் கலந்த அணுகுமுறை தடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது என வடகொரியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ரி யோங்-ஹோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை ஏதும் இல்லாமல், எங்களது தேச பாதுகாப்பில் சமரசம் செய்யமுடியாது. இச்சூழ்நிலையில், எங்கள் மீதான தடைகளை விலக்குவதற்கு முன்னரே நாங்கள் ஆயுதங்களை கைவிடுவதென்பது சாத்தியமில்லை.

வட கொரியா மீது விதிக்கப்பட்டு வரும் தொடர் தடைகள் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ரி கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers