உலகில் பெரும் பணக்காரர்கள் அதிகரித்து வரும் நாடு எது தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகில் எந்தெந்த நாடுகளில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறித்த அறிக்கையை, WEALTH X எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

WEALTH X எனும் அமைப்பு, உலகில் உள்ள நாடுகளில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும் 2012-2017 காலகட்டத்தில், 2.5 லட்சத்துக்கும் மேலான பெரும் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், உலகில் 35 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் பெரும் பணக்காரர்களாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் வியட்நாமும் உள்ளன.

உலகிலேயே அதிக பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நகரமாக ஹாங்காங் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உலகிலேயே அதிக பெரும் பணக்காரர்கள் இருக்கும் நாடாக அமெரிக்கா உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மதிப்புப்படி 200 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்கள் என WEALTH X தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகில் வேகமாக பணக்காரர்கள் அதிகரிக்கும் நாடுகள்

  1. வங்கதேசம்
  2. சீனா
  3. வியட்நாம்
  4. கென்யா
  5. இந்தியா
  6. ஹாங்காங்
  7. அயர்லாந்து
  8. இஸ்ரேல்
  9. பாகிஸ்தான்
  10. அமெரிக்கா

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers