ஓரினச்சேர்க்கையாளர்களினால் அதிகரிக்கும் எய்ட்ஸ்: செய்வதறியாது திகைத்து நிற்கும் சீனா

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

சீனா தனது நாட்டில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 14 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கிட்டத்தட்ட 820,000 மக்களுக்கு மேலாக எய்ட்ஸ் நோயினால் அவதிப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இதில் 2018 இன் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் மட்டும் புதிதாக 40,000 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ் எண்ணிக்கையில் காணப்படும் அதிகரிப்பு மிக முக்கியமாக பாலியல் இடைத்தொடர்புகளினாலே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் எய்ட்ஸ் தொற்று குருதி வழங்கல் மூலமாகவே மனிதருக்கு முனிதர் பரவியிருந்தது.

ஆனால் தற்போது இவ்வழி மூலமாக எய்ட்ஸ் கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருந்தாலும், வருடாவருடம் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 100,000 ஆல் அதிகரித்துக்கொண்டே செல்வதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது பொதுவாக ஓரினச் சேர்க்கையாளர்களின் பாலியல் தொடர்புகளாலேயே அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 70 - 90 வீதமான ஓரினச்சேர்க்கையுடைய ஆண்கள் பிற்காலத்தில் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதன்போது பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதாலேயே எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers